1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: சனி, 13 மே 2017 (15:44 IST)

ரிலீஸுக்கு முன்பே 10 முறை பார்த்த அஜித்

தான் நடித்த ‘விவேகம்’ படத்தின் டீஸர் ரிலீஸாகும் முன்பே 10 முறை பார்த்து ரசித்தாராம் அஜித்.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் எடிட்டர் ஆண்டனி எல் ரூபன். இந்தப் படத்தின் டீஸரை, முதலில்  50 விநாடிகளுக்குத்தான் கட் பண்ணியிருந்தாராம் ரூபன். ஆனால், அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ‘அஜித்57’ என்று ட்ரெண்ட் செய்ததைப் பார்த்து, ’57 விநாடிகளாக மாற்றுங்கள்’ என்று சொன்னாராம் சிவா. அதன்பிறகு சில ஸீன்களைச் சேர்த்து 57  விநாடிகளாக மாற்றியிருக்கிறார்.
 
அப்படி மாற்றியபிறகு, முன்பைவிட மிரட்டலாக இருந்ததாம். உடனே அதை அஜித்திடம் சிவா சொல்ல, ‘நானும் உடனே  டீஸரைப் பார்க்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் அஜித். அவரிடம் டீஸரைப் போட்டுக் காண்பிக்க, மறுபடி மறுபடி பிளே  பண்ணச் சொல்லி, 10 முறை பார்த்து ரசித்தாராம் அஜித். அத்துடன், டீஸரைக் கட் பண்ண எடிட்டர் ரூபனையும் கட்டிப் பிடித்து  பாராட்டியிருக்கிறார்.