வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:15 IST)

அஜீத்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த மச்சினி ஷாமிலி!

நடிகை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அஜீத்தின் மச்சினி ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகை கலக்கியவர். தற்போது அவர் ஹீரோயினாகிவிட்டார்.

2009ம் ஆண்டு வெளியான ஓயே தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார் ஷாமிலி. சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் அவர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த வீர சிவாஜி படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது. 
 
இந்நிலையில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா என்று ஷாமிலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அஜீத் எனக்கு அண்ணன் போன்றவர். அவருக்கு ஜோடியாக நிச்சயம் நடிக்க மாட்டேன். அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன் என்று கூறியுள்ளார்.