செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (18:02 IST)

ஓடிடியில் பாலாவின் ‘வர்மா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகிய ‘வர்மா’ திரைப்படம் தனக்கு திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என துருவ் விக்ரம் தந்தையும் நடிகருமான விக்ரம் கூறியதாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்த படம் மீண்டும் அர்ஜுன் ரெட்டி இயக்குனரின் உதவி இயக்குனர் கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற டைட்டிலில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாலா இயக்கிய ’வர்மா’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக சமீப காலமாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அக்டோபர் 6ஆம் தேதி இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அர்ஜுன் ரெட்டி ரீமேக் படம் ஏற்கனவே ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் வந்துள்ள நிலையில் தற்போது பாலாவின் வர்மா எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் தரும் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை பார்க்க துருவ் விக்ரம் மற்றும் விக்ரமும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது