1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 21 மே 2017 (13:47 IST)

கேன்ஸ் விழாவில் திரையிடப்படும் பாகுபலி!!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறு வது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 


 
 
வரும் 28 ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறும். இதில் உலகில் உள்ள சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். 
 
இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. இவற்றில் சமீபத்தில் வெளிய பாகுபலியும் ஒன்று. 
 
நேற்று பாகுபலி படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று பாகுபலி- 2 படம் திரையிடப்படவிருக்கிறது.