1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (17:34 IST)

சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகும் பாகுபலி 2

இந்தியா வசூல் சாதனை படைத்த பாகுபலி 2 திரைப்படத்தை சீனாவில் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி 2. இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதோடு ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்பொது இந்த படத்தை சீனாவில் வெளியிட உள்ளனர். முதல் பாகம் சீனாவில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்கவில்லை என்றாலும் இரணடாம் பாகத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
இதற்காக பிரபாஸ், அனுஷ்கா இருவரும் இணைந்து படத்தை விளம்பரம் செய்வதற்காக சீனா சென்றனர். இந்நிலையில் பாகுபலி 2 சீனாவில் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.