பாகுபலி 2 வரட்டும்... வெயிட்டிங்கில் அனுஷ்கா

Sasikala| Last Modified சனி, 28 ஜனவரி 2017 (15:41 IST)
அருந்ததி படம் அனுஷ்காவை தமிழ், தெலுங்கில் ஹீரோவுக்கு இணையான நடிகையாக்கியது. பாகுபலி படம் இன்னும்  ஒருபடிமேல் தன்னை உயர்த்தும் என்று அனுஷ்கா நம்புகிறார்.

 
ஆனால் பாகுபலி முதல்பாகத்தில் அனுஷ்காவுக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. தமன்னாவே அதிகம் ஆக்கிரமித்திருந்தார்.  ஆனால், இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கு பிரபாஸுக்கு இணையான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதனால், இரண்டாம் பாகம்  வரட்டும், அதன் பிறகு புதுப்படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
 
முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் நடித்த அனுஷ்காவிற்கு இதில் பிரபாஸுடனான காதல் காட்சிகள் அதிகம்  இருக்கிறதாம். இதற்காக அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைத்தார் எனவும் கூறப்படுகிறது.
 
ஏப்ரல் 28 பாகுபலி 2 திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :