1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (22:23 IST)

பாகுபலி எல்லாம் ஒரு வசூலா? என் படம் ரூ.5000 கோடி வசூல் செஞ்சுருக்கு: பிரபல இயக்குனர்

இந்திய திரையுலகில் ரூ.1500 கோடி வசூல் என்ற இலக்கை தாண்டிய முதல் படம் என்ற பெருமையை எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் பெற்றுள்ளது. அதேபோல் அமீர்கானின் 'தங்கல்' படமும் சீனாவில் வெளியிட்டதால் அதே ரூ.1500 கோடி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரையுலகில் முதல்முதலில் சாதனை செய்த இந்த இரண்டு படங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.



 


இந்த நிலையில் பாகுபலி, தங்கல் படத்தின் வசூல் ஒரு சாதனையையும் செய்யவில்லை என்றும் என் படம் ரூ.5000 கோடி வசூல் செய்துள்ளது என்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனில் ஷர்மா தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு இயக்கிய Gadar: Ek Prem Katha என்ற திரைப்படம் ரூ.265 கோடி வசூல் செய்ததாம். இந்த 265 கோடி ரூபாயை இன்றைய மதிப்பில் கணக்கிட்டால் ரூ.5000 கோடி மதிப்பு வரும் என்றும் அதனால் என்னுடைய படம் தான் அதிக வசூல் செய்த படம் என்றும் கூறி வருகின்றார்.

இப்படி பார்த்தால் அந்த காலத்தில் அதிக வசூல் செய்த படங்கள் ஏகப்பட்டவை உள்ளவை. அந்த படங்களின் வசூலை இன்றைய மதிப்பில் கணக்கிட்டால் ரூ.5000 கோடி என்ன? ரூ.10000 கோடி கூட வரும் என்று பாலிவுட் திரையுலகினர் அனில்சர்மாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒரு இந்திய திரைப்படம் சாதனை வசூல் செய்துள்ளதை பொறாமை குணத்துடன் பார்க்காமல், நம் நாட்டு படம் உலக அளவில் வெற்றி பெற்றுள்ளது என்ற பரந்த நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்று பலர் அனில்ஷர்மாவுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.