1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (08:41 IST)

திருமண மண்டபமாக மாறுகிறதா ஏவிஎம் கார்டன்? அதிர்ச்சி தகவல்!

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவி எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் படம் பிடிக்கப்படும். காலமாற்றத்தில் அது எல்லாம் மாறிப்போக கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டுடியோக்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோவை இப்போது திருமண மண்டபமாக ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஏவிஎம்க்கு சொந்தமான ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் இடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.