1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:58 IST)

’ஜவான்’ திரைப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவேன்: அட்லி

Atlee
ஜவான் திரைப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைப்பேன் என அந்த படத்தின் இயக்குனர் அட்லி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் அட்லி, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’ஜவான்’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 
 
எந்த ஒரு இயக்குனருக்கும் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்றும் அந்த வகையில்  ஷாருக்கானுடன் கலந்து பேசி ஆலோசனை செய்து அதன்பின் ஜவான் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ’ஜவான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடிய ஐடியா இருப்பதாகவும் அந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் இணைந்து நடிக்க முயற்சி செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva