1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 25 மே 2017 (13:43 IST)

ஆளுக்கொரு டூயட் – அட்லீ அதிரடி முடிவு

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மூன்று ஹீரோயின்களுக்குமே, ஆளுக்கொரு டூயட் பாடல் தர முடிவு செய்துள்ளார் அட்லீ.


 

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங், தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலே யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற போட்டி இருக்கும். இருவருமே வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், உள்ளுக்குள் போட்டியும், பொறாமையும் இருந்து கொண்டுதான் இருக்கும். இந்நிலையில், மூன்று ஹீரோயின்கள் இருந்தால்..?

யாருக்கு ஸீன் அதிகமாக இருக்கிறதோ, இல்லையோ… ஆளுக்கொரு டூயட்டைக் கொடுத்து பிரச்னை வராமல் சமாளிக்க முடிவெடுத்துள்ளாராம் அட்லீ. ஏற்கெனவே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் விஜய் – நித்யா மேனன் டூயட்டை எடுத்துள்ள அட்லீ, தற்போது ஐரோப்பாவில் விஜய் – காஜல் அகர்வால் டூயட்டை எடுத்து வருகிறார். சென்னை திரும்பியதும், விஜய்யும், சமந்தாவும் டூயட் பாடப் போகின்றனர்.