திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:35 IST)

முதலில் நான் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை - அதுல்யா ரவி

முதலில் நான் தீவிர விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை’ எனத் தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.
 
காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இன்று ரிலீஸாகும் ‘ஏமாலி’ படத்தில் நடித்திருப்பவர், ஆரி ஜோடியாக ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது சமுத்திரக்கனி இயக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
 
நான் விஜய்யின் தீவிர ரசிகை. இப்படிச் சொன்னால் விஜய்யைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லவில்லை. இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் எடுத்த பிறகே விஜய்யைச் சந்திக்க விரும்புகிறேன். நான் முதலில் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை எனத் தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.