புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (15:18 IST)

மீண்டும் ஜோடி சேரும் ஈட்டி பட நாயகன், நாயகி!!

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து, தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீ திவ்யா. 


 
 
தற்போது ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே `ஈட்டி' படத்தில் அதர்வாவுடன் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். 
 
இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் பர்னீஷ், `ஒத்தைக்கு ஒத்த' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் தியாகராஜன், நரேன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 
 
கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை பர்னீஷ் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.