உதவி இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை இனியா!

Sasikala| Last Modified சனி, 15 ஜூலை 2017 (15:25 IST)
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 2009 முதல் 2014 ஆண்டு வரை வந்த படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களாக விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 6 வருடங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் வாகை சூடவா படத்திற்கு, 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார் நடிகை இனியா. தற்போது உதவி  இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

 
சினிமாவில் நடிகர், நடிகைகள் நடிப்பில் ஆரம்பித்து அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுவிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான்.  தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா, மௌன குரு, சென்னையில் ஒருநாள் உள்பட பல படங்களில் நடிகையாக நடித்தவர் இனியா. தற்போது பொட்டு மற்றும் ரெண்டாவது ஆட்டம் ஆகிய படங்களின் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில் நடிகை இனியா முதல் முறையாக மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்திருக்கிறார், நடிகை இனியா. மகேஷ்  என்பவரது இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள 'மியா' என்ற ஆல்பத்தில் நடிகை இனியா நடித்திருப்பதோடு, தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :