1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (21:29 IST)

“சங்கத் தலைவரை முதல்ல விவசாயம் பண்ணச் சொல்லுங்க” – இயக்குநர் ஆவேசம்

‘சங்கத் தலைவரை முதல்ல விவசாயம் பண்ணச் சொல்லுங்க’ என்று ஆவேசப்பட்டுள்ளார் இயக்குநர் ஒருவர்.


 

 
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, சங்கத் தலைவர் உட்பட சில நடிகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், தளபதி நடிகர் கூட விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
 
இந்நிலையில், ‘உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளின் கடனை ரத்து செய்தது போல், தமிழகத்திலும் செய்ய வேண்டும்’ என தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் சங்கத் தலைவர்.
 
இதற்கு, மூவேந்தர்களில் இருவரை தன்னுடைய பெயராகக் கொண்டுள்ள இயக்குநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டது போல், விவசாயிகள் பாவமென விவரமில்லாதவர்கள் அறிக்கை விடுகிறார்கள். முதலில் அவர்களை தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க’ என்று ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.