அசோக் செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள நித்தம் ஒரு வானம் என்ற படத்தின் போஸ்டரை இணையத்தில் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு நித்தம் ஒரு வானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. போதை ஏறி புத்தி மாறி படத்தை தயாரித்திருந்த ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது.
அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.