1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified சனி, 27 மே 2023 (12:44 IST)

ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாவது திருமணத்துக்கு முதல் மனைவியின் ரியாக்‌ஷன்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான ஆஷிஷ் வித்யார்த்தி பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய 60 ஆவது வயதில் ரூபாலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் பதிவு திருமணமாகவும், சிறிய குடும்ப நிகழ்வாகவும் நடந்துள்ளது. ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ராஜோஷி பருவாவை முதல் திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமணம் சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் ஆஷிஷின் திருமணத்தைப் பற்றி அவரின் முதல் மனைவி ராஜோஷி வித்யார்த்தி மறைமுகமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “சரியான நபர் உங்களை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார்” என்று மறைமுகமாக கூறியுள்ளார். இரண்டாவது ஸ்டோரியில் “நீங்கள் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு தகுதியான நபர்” என்று கூறியுள்ளார்.