1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:11 IST)

மாறி மாறி அன்பைப் பொழியும் விஷால் & ஆர்யா!

நடிகர்கள் விஷாலும் ஆர்யாவும் டிவிட்டரில் எனிமி படம் பற்றி பேசியுள்ளனர்.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாலினி நடித்து வந்த நிலையில் ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது மலையாள நடிகையான மம்தா மோகந்தாஸ் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மம்தா தமிழில் குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ஆர்யாவின் பர்ஸ்ட் லுக்கை படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார். அதைப் பகிர்ந்த விஷால் ‘எனக்கு மிகவும் பிடித்த எதிரி. எனக்கு இந்த படத்தில் உங்களைப் பிடிக்காது. ஆனால் நிஜ வாழ்க்கையில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி என்னை எதிர்கொள்ள தயாராகுங்கள். உங்களிடம் இந்த படத்தில் நான் நட்பு பாராட்டப் போவதில்லை’ எனக் கூறியிருந்தார்.

விஷாலின் இந்த டிவீட்டைப் பகிர்ந்த ஆர்யா ‘ உங்களின் இனிமையான எதிரி நான். கவலைப்படாதீர்கள், நான் உங்களிடம் இந்த படத்தில் மென்மையாக நடந்து கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.