செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (17:05 IST)

25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் அரவிந்த்சாமி!

நடிகர் அரவிந்த்சாமி மலையாள சினிமா ஒன்றில் நடிக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் அரவிந்த் சாமி இடைவெளி விட்டு விட்டு நடித்தாலும் தன் நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்தவர். இவர் நடிப்பில் இப்போது'கள்ளபார்ட்', 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'நரகாசூரன்', 'தலைவி' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் அவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒட்டு என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் குஞ்சகோ போபன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.