1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:38 IST)

தமிழில் ரீமேக் ஆகும் மோகன்லால் படம்

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘பெருச்சாழி’ மலையாளப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது.


 
மோகன்லால் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘பெருச்சாழி’. தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘கல்யாண சமையல் சாதம்’ படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அரசியல் காமெடிப் படமாக இது எடுக்கப்பட்டிருந்தது.

அருண் வைத்யநாதன் இயக்கிய ‘நிபுணன்’, சமீபத்தில் ரிலீஸானது. அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, வைபவ், கிருஷ்ணா நடித்துள்ள இந்தப் படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, அடுத்ததாக ‘பெருச்சாழி’யை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் படம் பொருத்தமாக அமையும் என அவர் நம்புகிறார்.