செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:29 IST)

உங்க புது பாடலை கேட்கனும்... சீக்கிரம் வாங்க எஸ்பிபி சார்- நடிகர் அர்ஜூன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் இந்த பிரார்த்தனையில் தன்னை இணைத்து கொண்டார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர் கூறியதாவது:
 
எஸ்பிபி அவர்கள் உலக அளவில் ஒரு இசை மேதை என்றும் அவர் நிச்சயம் குணமாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். எஸ்பிபி அவர்கள் ஒரு நல்ல போராளி என்றும் அவர் கொரோனாவுக்கு எதிராகவும் போராடி விரைவில் இந்த நோயில் இருந்து மீண்டுவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் தான் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ள அர்ஜூன்,  பிரார்த்தனைவிட உலகில் வேறு எந்த மருந்தும் கிடையாது என்றும் ரசிகர்களின் பிரார்த்தனையால் அவர் மீண்டும் வருவார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் உங்களுடைய புது பாடலை கேட்கணும் எஸ்பிபி சார் அதனால் சீக்கிரம் எழுந்து வாருங்கள் என நடிகர் அர்ஜுன் அந்த வீடியோவில் இருந்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது