1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (16:27 IST)

அர்ஜுன் மீதான மீடு சர்ச்சை புகார்… விசாரணையில் அதிரடி திருப்பம்!

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்தார்.

மீ டு குற்றச்சாற்று குறித்த பதிவுகள் பரவலாக அதிகமான போது நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சொன்னதுடன் பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகாரும் அளித்தார். இருவரும் இணைந்து நடித்த நிபுணன் படத்தின் படப்பிடிப்பின் போது அர்ஜுன் தன்னிடம் எல்லை மீறி நடந்துகொண்டதாக அவர் கூறியிருந்தார்.

இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ருதி கூறிய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பொய் புகார் கொடுத்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.