ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (16:45 IST)

இவங்கதான் உங்கள் காதலியா?… அர்ஜுன் தாஸ் பகிர்ந்த புகைப்படம்!

கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. அவர் கதாநாயகனாக நடித்த, வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’ படம் பாராட்டுகளைப் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதே போல சாந்தகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ரசவாதி திரைப்படமும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.

இந்நிலையில் தமிழை தாண்டியும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அர்ஜுன் தாஸ் அடுத்து மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ’ஜூன்’ மற்றும் ‘மதுரம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அகமது கபீர் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் அர்ஜுன் தாஸ் ஒரு பெண்ணோடு இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த பெண்ணின் முகம் தெரியாத வண்ணம் இருக்க, அந்த புகைப்படத்தில் ஹார்ட்டின் ஸ்மைலியை இடம்பெறச் செய்துள்ளார் அர்ஜுன் தாஸ். இதனால் அந்த பெண் அவரின் காதலியாக இருப்பாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே ஐஸ்வர்யா லஷ்மியும் அர்ஜுன் தாஸும் காதலிப்பதாக தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.