சைக்கோ த்ரில்லர் கதையில் நடிக்கும் நயன்தாரா

CM| Last Modified சனி, 27 ஜனவரி 2018 (12:37 IST)
சைக்கோ த்ரில்லர் கதையில் நயன்தாரா நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கியவர் அறிவழகன். நயன்தாராவை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக கடந்த செப்டம்பர் மாதமே அறிவித்தார். ஆனால், இதுவரை அந்தப் படத்தைப் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.இந்நிலையில், மலையாள நடிகை மஞ்சு வாரியரிடமும் அறிவழகன் கதை சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியானது. இருவரிடமும் ஒரே கதையைத்தான் அறிவழகன் சொல்லியிருக்கிறார் என்ற தகவலை அறிவழகன் மறுத்துள்ளார்.

“நான் நயன்தாராவுக்கு சொன்ன கதை, சைக்கோ த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. ஆனால், மஞ்சு வாரியரிடம் சொன்ன கதை குடும்ப த்ரில்லர்” என்று விளக்கம் கொடுத்துள்ளார் அறிவழகன்.


இதில் மேலும் படிக்கவும் :