1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (14:26 IST)

பொங்கல் வெளியீடு வேண்டாம் என முடிவு செய்த சுந்தர் சி… அரண்மனை 4 ரிலீஸ் எப்போது?

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் பொங்கலுக்கு ரஜினி படம் உள்பட பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதால் இப்போது ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.