1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (08:06 IST)

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘அரண்மனை 3’: தேதி அறிவிப்பு

பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், ராஷி கண்ணா உள்பட பலர் நடித்த திரைப்படம் அரண்மனை 3. 
 
இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் விமர்சகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரண்மனை 3 படம் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
 
அரண்மனை 3 திரைப்படம் ஜி5 ஓடிடி நவம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது