வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (22:21 IST)

பிக்பாஸ்: அனைவரும் எதிர்பார்த்தபடி வெளியேறிய அனுயா

கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கிண்டலடித்தாலும் இன்றைய ஹாட் டாக் அந்த நிகழ்ச்சிதான்



 
 
இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா அல்லது ஜூலி இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்று நேற்றே அறிவிக்கப்பட்டாலும், ஜூலி வெளியேற வாய்ப்பே இல்லை என்றுதான் அனைவரின் கருத்தாக இருந்தது. பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஜூலி மட்டும்தான் துறுதுறுவென்று இருப்பதால் அவரை வெளியேற்றிவிட்டால் நிகழ்ச்சி மந்தமாகிவிடும் என்று அனைவருக்கும் தெரியும்
 
எனவே அனைவரும் எதிர்பார்த்தபடியே அனுயா முதல் பலிகடா ஆக்கப்பட்டார். இன்ற் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனுயாவை பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.