செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (12:32 IST)

தெலுங்கு நடிகருடன் லிவிங் டு கெதரில் வாழும் பிரபல நடிகை!

மலையாள சினிமா மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து வரும் நடிகை ஒருவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகருடன் லிவிங் டுகெதரில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். மலையாளம் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றனர்.

அதில் ஒருவரான அந்த நடிகை இப்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆந்திராவிலேயே தங்கியும் உள்ளார். இதற்கெல்லாம் காரணம் அங்குள்ள ஒரு இளம் நடிகரோடு லிவிங் டுகெதரில் இருப்பதுதானாம். இவருக்காக அந்த நடிகர் தனி வீடு ஒன்றே வாங்கிக் கொடுத்துள்ளாராம்.