வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (16:13 IST)

மீண்டும் இணைந்த ஆர்ட்டிகிள் 15 கூட்டணி… ஆயுஷ்மான் வெளியிட்ட புகைப்படம்!

ஆயுஷ்மான் குர்ராணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆர்ட்டிகிள் 15.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்டிக்கிள் 15ன் படி இந்தியாவில் இருக்கும் அனைத்தும் மனிதர்களும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறை எதார்த்தமோ வேறாக உள்ளது. அதை பட்டவர்த்தனமாக சொல்லும் படமாக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது ஆர்ட்டிக்கிள் 15 என்ற படம். நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்க, உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த பட நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்கும் புதிய படத்தை மீண்டும் இயக்க உள்ளார் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இயக்குனர் அனுபவ் சின்ஹா. இந்த படத்துக்கு அனேக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில்ல் டி சீரிஸுடன் இணைந்து அனுபவ் சின்ஹாவே தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை ஆயுஷ்மான் தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,