1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (13:46 IST)

வருகிறது அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்!? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தடைப்பட்ட நிலையில் தற்போது ஒருவழியாக படப்பிடிப்புகள் ஏறத்தாழ முடிந்துவிட்டது.

இந்நிலையில் அண்ணாத்த பட அப்டேட் குறித்து ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில் இந்த மாதம் ஆகஸ்டு 12ல் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள் வருகிறது. அதனால் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் சிறுத்தை சிவா பிறந்தநாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.