அனிதாவை தூக்கிவிட்ட விஜய் டிவி - அடுத்தடுத்து வந்து குவியும் பட வாய்ப்புகள்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வரும் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்த அனிதா அந்த நிகழ்ச்சியை அடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் அப்லாஸ் அள்ளினார்.
இந்நிலையில் அனிதாவிற்கு படவாய்ப்புகள் மளமளவென குவியத்துவங்கியுள்ளது. அதிலும் முதல் படத்திலே நடிகர் சத்யராஜ், நடிகை மீனா , சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர நடிகர் நடிகைகளுடன் நடிப்பதை இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகிறது.