1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (19:12 IST)

அக்கட தேசத்தில் ஆர்வம் காட்டும் அனிருத்

இதுவரை தமிழில் மட்டுமே இசையமைத்து வந்த அனிருத், தெலுங்கிலும் இசையமைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.



 
நடிகர், நடிகைகள் மட்டுமல்ல… ஒரு மொழியில் ஜெயித்து நிலையான இடத்தைப் பிடித்துவிட்டபிறகு இன்னொரு மொழியில் காலூன்ற, திறமையை வெளிப்படுத்த டெக்னீஷியன்களும் ஆசைப்படுகின்றனர். அந்த வரிசையில், இசையமைப்பாளர் அனிருத்தும் இடம்பிடித்துள்ளார்.  ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் அவரை உலகம் முழுதும் கொண்டு சேர்த்தது. அதுமட்டுமின்றி, விஜய், அஜீத், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரை அறிமுகப்படுத்தியது தனுஷ் என்றாலும், இருவருக்கும் இடையே தற்போது லடாய் என்பதால், அவர் படங்களுக்கு இசையமைப்பதில்லை.

இந்நிலையில், திரி விக்ரம் – பவன் கல்யாண் இணையும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அனிருத். திரி விக்ரமின் போன படத்திற்கே அவர் இசையமைக்க வேண்டியது. ஆனால், தமிழில் பிஸியாக இருந்ததால், அவரால் இசையமைக்க முடியாத சூழல். எனவே, அப்போதே அடுத்த படத்திற்கு கண்டிப்பாக இசையமைக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிட்டார் திரி விக்ரம். இந்தப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் அனிருத்.