1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2017 (18:38 IST)

தனுஷ் படத்துக்கு இசையமைக்க நேரமில்லை: அனிருத்

விஐபி இரண்டாம் பாகத்தில் இசையமைக்காதது குறித்து அனிருத் தனக்கு நேரமில்லை என தெரிவித்துள்ளார்.
 

 
 
தனுஷ் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வந்த அனிருத் பவர் பாண்டி மற்றும் விஐபி 2 ஆகிய படங்களில் இசையமைக்கவில்லை. இதுகுறித்து பலரும் பலவிதமாக பேசி வந்தனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் பல செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் விஐபி 2 படத்திற்கு இசையமைக்காதது குறித்து அனிருத் கூறியதாவது:-
 
நான் இசையமைத்து வரும் மற்ற படங்களினால் எனக்கும் நேரமில்லை. நான் இரண்டாவது பாகத்துக்கு இசையமைத்திருந்தால் அது முதல் பாகம் போல இல்லாமல் கூட இருந்திருக்கலாம். விலகி மீண்டும் இணையும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்றார்.