1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (08:47 IST)

செம ஷோக்கா கீறியேம்மா.... மாடர்ன் ட்ரஸ்ல மாஸ் காட்டும் ஆண்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
 தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் வித்யாசமான ரோலில் நடித்து வருகிறார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்தும் வரும் ஆண்ட்ரியா தற்போது மாடர்ன் உடையணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஏகோபித்த லைக்ஸ் அள்ளி குவித்துள்ளார்.