திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (13:24 IST)

’ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கு சிறப்பு சலுகை அறிவித்த ஆந்திர அரசு: படக்குழுவினர் மகிழ்ச்சி!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிய ’ஆர்.ஆர்.ஆர்’  என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
இந்நிலையில் சமீபத்தில் ஆந்திர அரசு திரையரங்குகளில் கட்டணம் குறித்த உத்தரவு பிறப்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
திரையரங்குகளில் தாறுமாறாக கட்டணங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையிலான இந்த உத்தரவு திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படத்திற்கு சிறப்பு சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதன்படி இந்த படத்திற்கு முதல் 10 நாட்களுக்கு திரையரங்கு கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களை நிர்ணயித்துக்கொள்ள ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது
 
இதனை அடுத்து ஆர் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது