அய்யோ காமெடி... அந்நியன் கெட்டப்பில் மிரட்டலான அர்ச்சனா!
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளியான அர்ச்சனா "காமெடி டயம்" நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். அதையடுத்து ‘இளமை புதுமை’ , ‘செலிபிரிட்டி கிச்சன்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் செய்தி வாசிப்பாளினியாகவும் இருந்துள்ளார்.
எவ்வளவு புகழ் , வளர்ச்சி வந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து சற்றும் தளராமல் திருமணத்திற்கு பின்னும் டிவி, சினிமா என்று பிஸியாக இருந்தார். இவருக்கு சாரா என்று ஒரு மகள் இருக்கிறார். அர்ச்சனா தனது மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழில் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். அந்தவகையில் அர்ச்சனா அந்நியன் கெட்டப்பில் மிரட்டலான புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இது பார்ப்பதற்கு மிகவும் காமெடியாக இருக்கிறது.