திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:53 IST)

தாமதமாகும் 2.O ரிலீஸ்: கடுப்பில் எமி செய்த காரியம்...

நடிகை எமி ஜாக்சன் 2.O படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இயக்குனர் ஷங்கரோ படத்தை இப்பொழுது ரிலீச் செய்யும் திட்டத்தில் இருப்பது போல் தெரியவில்லை. 
 
கடந்த ஆண்டு எமி நடிப்பில், கெத்து, தெறி, தேவி (ஒரு பாடல்) என வெள்ளித்திரையில் தலையை காட்டினார். இந்த ஆண்டு ரஜினியுடன் நடித்திருக்கும் 2.0 படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.
 
இந்த படம் ரிலீஸானால் அடுத்து தமிழ் படங்கள் தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் 2.O பட ரிலீஸ் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். 
 
ஆனால், 2017 ஆம் ஆண்டில் தனக்கு எந்த படமும் வெளியாகாத நிலையில் பொறுமை இழந்திருக்கும் எமி, திரையுலகினரும், ரசிகர்களும் தன்னை மறந்துவிடாமலிருக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது போட்டோ ஷூட் நடத்தி அசர வைத்திருக்கிறார். பாத்ரூம் ஷவரில் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அதனை இணைய தளத்தில் வைரலாக்கி உள்ளார்.