வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (06:45 IST)

இயக்குனர் ஷங்கரை தர்மசங்கடத்தில் தள்ளிய டிடிவி தினகரனின் அதிரடி முடிவு

நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு கூட்டம் கூடுவதாக ஜெயா டிவி செய்திகளை ஒளிபரப்பி வந்தாலும் உண்மையில் மக்கள் மத்தியில் அவருடைய பிரச்சாரத்திற்கு வரவேற்பில்லை என்பதுதான் உண்மை. ஜெயலலிதா அளவுக்கு மக்களை கவர்ந்து இழுக்க தெரியாததாலும், அனுபவம் இல்லாததாலும் பிரச்சாரத்தின்போது திணறி வருகிறார்



 


ஆர்கே நகர் வாக்காளர்கள் அனைவரும் தினகரன் எவ்வளவு பணம் கொடுப்பார் என்பதை மட்டுமே கவனித்து வருகின்றனர். அவர் பேச்சை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் அதே சமயம் ஓபிஎஸ் அணியினர் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு அதிகமாக உள்ளது

இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் அணி அடுத்தகட்டமாக பிரச்சாரத்தில் கவர்ச்சியை சேர்க்க முடிவு செய்துள்ளது. நடிகை எமிஜாக்சன் தொப்பி அணிந்து ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்ய ஒரு பெரிய தொகை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் கேள்விப்பட்டு ஷங்கர் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம். படம் வெளியாகும் வரை படத்தின் இமேஜை குலைப்பது போல எந்த விஷயத்திலும் ஈடுபடக்கூடாது என்று பலமுறை ஷங்கர் வலியுறுத்தியும் எமி கேட்பதாக இல்லை என்றும், எமியின் இந்த திடீர் அரசியல் ஆதரவு நிலைப்பாடு ஷங்கரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.