ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (20:21 IST)

அமீரின் வளர்ப்பு குடும்பத்துடன் பாவினி - வைரலாகும் பேமிலி போட்டோ!

நடன கலைஞரான அமீர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சியமனார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் நடிகை பாவினி ரெட்டி. ஆந்திராவை சேர்ந்தரான பாவினி ரெட்டி தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்ன தம்பியில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார். 
 
இவரது கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துக்கொண்டு பரீட்சியமானார். அதில் அமீருடன் நெருக்கமாக பழக அது காதலாக மாறியது. இருவரும் நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்தனர். 
துணிவு படத்தில், அமீர் - பாவனி ஆகியோர் காதலர்களாக நடித்திருந்தனர். அதை தொடர்ந்து தற்போது இருவரும் V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் அமீர் தன்னை வளர்த்த குடும்பத்துடன் பாவினியையும் இணைத்துக்கொண்டார். குடும்பமாக அவர்கள் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.