1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (18:30 IST)

வடசென்னையில் அமலா பால்...?

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னையில் சமந்தாவுக்குப் பதில் அமலா பால் நடிக்கக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.


 
 
வடசென்னையில் குடிசைவாழ் பெண்ணாக சமந்தா நடிப்பதாக இருந்தது. இதற்காக சென்னையின் குடிசைப் பகுதிகளுக்கு சென்று அம்மக்களின் நடவடிக்கைகளை சமந்தா கவனித்து வந்தார்.
 
வடசென்னையின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில், சமந்தாவுக்குப் பதில் அமலா பால் நடிக்கக்கூடும் என செய்திகள் வருகின்றன.
 
சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் வரும் டிசம்பரில் நடத்தப்படலாம் என்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கும் முடிவில் இல்லை.
 
வட சென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது. சமந்தாவை நடிக்க வைத்தால் இரண்டாவது மூன்றாவது பாகங்களில் அவரை நடிக்க வைக்க முடியாது என்பதால் அவரை மாற்றிவிட்டு அமலா பாலை நடிக்க வைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.