1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (12:56 IST)

விவாகரத்து, படங்கள்... அமலாபாலின் அடுத்த மூவ்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் படங்களில் பிசியாகிவிட்டார். எதிர்காலத்தில் ஹோட்டல் துவங்க வேண்டும் என்பது நடிகை அமலா பாலின் திட்டமாம். 


 
 
கன்னடத்தில் அமலாபால் நடித்த ஹெப்புலி படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் மலையாளம் மற்றும் தமிழிலும் பிசியாகிவிட்டார்.
 
விஜய்யை பிரிந்துவிட்டாலும் பேட்டி கொடுக்கும்போது எல்லாம் தனக்கு இன்னும் பிடித்த நபர் விஜய் தான் என்று கூறி வருகிறார். அமலா பால். 
 
எதிர்காலத்தில் சென்னையில் ஹோட்டல் துவங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் அமலா பால். அந்த ஹோட்டலில் யோகா, தியான வகுப்புகளும் நடத்தப்படுமாம்.