1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 10 மே 2016 (17:02 IST)

திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன்தான் : விஷால் ஆதங்கம்

திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் போராடி வருகிறேன் என்று விஷால் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். 


 


 
 
விஷால் நடிக்கும் மருது படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது விஷால் கூறியதாவது:-
 
அவன் இவன் படத்துக்கு பின்னர் நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் மருது. இப்படத்தின் மூலம் காமெடி நடிகர் சூரி, குணச்சித்திர நடிகராக வலம் வருவார். நான் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்துள்ள முதல் படம் இது. இப்படம் மே-20ஆம் தேதி வெளியாகிறது.
 
திருட்டு விசிடிக்கு எதிராக நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாகப் போராடி வருகிறேன். என்னுடைய படங்களுக்கு மட்டும் அல்லாமல், எல்லா நடிகரின் படங்களுக்காகவும்தான் போராடி வருகிறேன்.

மே-20 ஆம் தேதி வெளியாகும் மருது படத்துக்கும் கட்டாயம் திருட்டு விசிடி வெளியிடுவார்கள், அப்போது என் நண்பர்களுடன் களம் இறங்குவேன். திருட்டு விசிடியைக் கண்டுப்பிடித்தால் நிச்சியமாக அதைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்