வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2024 (10:14 IST)

நம்பர்கள் தற்காலிகமானது… அன்புதான் நிரந்தரம் – புஷ்பா 2 சக்ஸஸ் மீட்டில் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு  வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது.

இதையடுத்து புஷ்பா 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் புஷ்பா 2 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்தது. அப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி ஆறு நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இந்த வசூல் தொடரும் பட்சத்தில் புஷ்பா மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் சக்ஸஸ் மீட் விழாவில் பேசிய அல்லு அர்ஜுன் “ ஆறு நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் என்பது ரசிகர்களுடைய அன்பின் வெளிப்பாடு. இந்த எண்கள் தற்காலிகமானதுதான். ஆனால் ரசிகர்களின் அன்பு நிரந்தரமானது. இந்த சாதனையை கூடிய விரைவிலேயே இன்னொரு படம் முறியடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதுதான் சரியான வளர்ச்சியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.