ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (12:17 IST)

படத்தின் பட்ஜெட்டை இரேண்டே பிஸ்னஸில் எடுத்த புஷ்பா 2! மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பிஸ்னஸ் இப்போது சூடுபிடித்துள்ளது. படத்தின் ஓடிடி பிஸ்னஸ் மட்டும் 250 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாம். அதே போல ஓடிடி உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விலைபோயுள்ளதாம். இந்த இரண்டு பிஸ்னஸ் மூலமாகவே படத்தின் பட்ஜெட்டைக் கைப்பற்றி விட்டார்களாம். இதற்கு மேற்கொண்டு வரும் பணம் முழுவதும் லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.