1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (11:14 IST)

பெண் தெய்வத்தின் பெயரை திருநங்கைக்கு வைப்பதா? – அக்‌ஷய் குமார் படத்திற்கு எதிராக ட்ரெண்டிங்!

இந்தியில் அக்‌ஷய் குமார் நடித்து வெளியாகவுள்ள லக்‌ஷ்மி படத்திற்கு தடை விதிக்கக் கோரி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் காஞ்சனா. இதை இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்த நிலையில் அதில் கதாநாயகனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியான நிலையில் லக்‌ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்தலைப்பில் பாம் என்ற சொல்லை எடுத்துவிட்டு லக்‌ஷ்மி என பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருநங்கை கதாப்பாத்திரம் ஒன்றிற்கு இந்து பெண் தெய்வமான லக்‌ஷ்மியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுவதாகவும் எனவே இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் டிவிட்டரில் பலர் #Ban_Laxmmi_Movie என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.