1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (06:32 IST)

கர்ப்பம் குறித்து கூலாக பதில் கூறி ஆச்சரியப்படுத்திய கமல் மகள் அக்சராஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிகை மற்றும் உதவி இயக்குனராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். கமல் இயக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதை இயக்குனராகவும், அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார்.



 


மேலும் அவர் பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அக்சராஹாசன் இளம் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வருகிறாராம். அக்சராவின் மூத்த சகோதரி ஸ்ருதிஹாசனே இன்னும் கர்ப்பிணி வேடத்தில் நடிக்காத நிலையில் இந்த சின்ன வயதில் அவர் கர்ப்பிணி வேடம் ஏற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அக்சராஹாசன், '‘இது சவாலான கேரக்டர். மனதளவில் சில விஷயங்களில் நம் நாடு முன்னேற வேண்டும். அதற்கான விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்’ என்று கூலாக பதில் கூறியுள்ளார்.