புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 மே 2022 (16:44 IST)

ஆஹா… டிவிக்கும் வந்துடுச்சுப்பா… சமூலவலைதளங்களில் கலக்குன ’அகண்டா’

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ’அகண்டா’

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ’அகண்டா’. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது என்பதும் 60 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 150 கோடி வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதையடுத்து இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது. படத்தில் பாலகிருஷ்ணாவின் பஞ்ச் வசனங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் எவ்வளவுக்கெவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு ட்ரோலும் செய்யப்பட்டது. படத்தில் பாலகிருஷ்ணா பேசும் “both are not same” வசனம் பிரபல மீமானது.

இந்நிலையில் இப்போது அகண்டா திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மே 8 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதை ஜி தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.