ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (20:51 IST)

அஜித்துக்கு இந்த மாதிரி படத்துல நடிக்கனும்னு ஆசையாம்...!!!

நடிகர் அஜித்குமார் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அஜித் ஐதராபாத் ஷூட்டிங்கி பங்கேற்றார். 
 
அதே இடத்தில்தான் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் சரித்திர படம், மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. 
 
இதை தெரிந்துக்கொண்ட அஜித், அந்த பட செட் இருக்கும் இடத்துக்கு சென்று, பிரியதர்ஷன் மற்றும் படக்குழுவினரை சந்தித்து வெகுநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 
 
இதில் ஸ்பெஷல் என்னவெனில், அஜித்தும் வரலாற்று படமொன்றில் நடிக்க விரும்புவதாக அந்த படக்குழுவினரிடம் கூறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.