திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:38 IST)

அஜித் 61 படப்பிடிப்புக்காக ஐதராபாத் கிளம்பிய அஜித்…. வைரல் photos!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் கிளம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இம்மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய கொள்ளை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த கதைக்களத்தை ஹெச் வினோத் உருவாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது அஜித் அந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இது சம்மந்தமாக நேற்று அவர் ஏர்போட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.