அஜித்தின் அடுத்த படம்; உண்மையை சொன்ன புஷ்கர்-காயத்ரி
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருந்தது. இப்படத்தில் அஜித் உடலமைப்பை குறித்து அனைவராலும் பேசப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து யாருடன் இணைவார் என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வியாக இருந்த நிலையில் , இயக்குனர் சிவா, புஷ்கர்-காயத்ரி போன்றோரின் பெயர்கள் அடிபட்டது. தற்போது புஷ்கர்-காயத்ரி இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். விக்ரம் வேதா படத்தை அடுத்து கதையை தயார் செய்து வருகிறோம். கதை முழுவதும் முடிந்த பிறகு தான் கதைக்கான நாயகர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும், எங்களது வழக்கம் அதுதான். இன்னும் கதையே தயாராகாத நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.