அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு அஜித் 10 மாதங்கள் கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர்தான் அவரின் அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் மோகன் ராஜா, சிறுத்தை சிவா மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் உள்ளதாக சொல்லப்படுகிறது.